கோவளத்தில் சைக்கிள் பேரணி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கோவளம் ஊராட்சியில், மக்கள் சேவையில் பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு தொடர் ஜோதி மற்றும் சைக்கிள் பேரணி தொடக்க விழா நடந்தது. திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமை தாங்கினார். கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர் வரவேற்றார். தமிழ்நாடு குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, தொடர் ஜோதி ஓட்டம் மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியின்போது, மக்கள் சேவையில் பொதுசுகாதாரத்துறையின் சாதனை குறித்த  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி  முக்கிய வீதிகள் வழியாக  சென்றனர்.

நிகழ்ச்சியில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏக்கள் திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, சோழிங்கநல்லூர் அரவிந்த ரமேஷ், செய்யூர் பாபு, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சத்யா சேகர், ஊராட்சி தலைவர்கள் கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், கானத்தூர் வள்ளி எட்டியப்பன், படூர் தாரா சுதாகர், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: