நாகையில் அம்பேத்கர், பெரியார் பெயரில் கட்டப்படும் படிப்பகம்: கூலி வேலை செய்து படிப்பகம் கட்டும் இளைஞர்களுக்கு பாராட்டு

நாகை: நாகை அருகே அம்பேத்கர், பெரியார் பெயரில் இளைஞர்களே நூலகத்துடன் கூடிய படிப்பகத்தை கட்டி வருகின்றனர். தொண்டு நிறுவன உதவியுடன் 50% பணிகள் நிறைவடைந்த நிலையில் எஞ்சிய பணிகளுக்கு வங்கியில் கடன் பெற்று இளைஞர்கள் படிப்பகத்தை கட்டி வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அம்பேத்கர் நகரை சேர்ந்த இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்துடன் கூடிய அம்பேத்கர் பெயரில் பெரியார் படிப்பகம் ஒன்றை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கின. சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 50% கட்டுமான வேலை நிறைவடைந்த நிலையில் மேற்கொண்டு பணியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது.

இருப்பினும் மனம் தளராத இளைஞர்கள் தற்போது வங்கியில் ரூ.50,000 கடன் உதவி பெற்று மீண்டும் கட்டுமான பணிகளை புத்துணர்ச்சியோடு தொடங்கி உள்ளனர். படிப்பக கட்டுமானத்திற்கான நிதியை சேமிக்கும் வகையில் மண் அள்ளுவது, கல் தூக்குவது போன்ற பணிகளை அப்பகுதி மாணவர்கள் ஆர்வத்துடன் செய்கின்றனர்.

தற்போதைய வங்கிக்கடன் போதுமானதாக இல்லை என கூறும் இளைஞர்கள் கட்டடத்தின் கான்கிரீட் பணிகள் முழுமை அடைந்தாலும் மாடி அமைப்பது, வண்ணம் தீட்டுவது போன்ற இறுதிக்கட்ட பணிகள் மிச்சம் இருப்பதாகவும், விரைவில் பதிப்பகத்தை கட்டி எழுப்பி மாணவர்களிடம் ஒப்படைப்போம் என்ற நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Related Stories: