தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி..!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப் போது மழை பெய்வதும் அதனை தொடர்ந்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. வழக்கமாக மழை பெய்து சிறிது நேரம் கழித்து அரு விகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கும். ஆனால் நேற்று முன்தினம் மழை பெய்து கொண்டிருந்தபோதே திடீரென காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு வளைவையும் தாண்டி மெயின் அருவி தடாகத்தின் மீது ஆக்ரோஷமாக கொட்டியது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் பாதுகாப்பு மாலை முதல் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றால அரு வியிலும் வெள்ள நீர் படிக் கட்டுகளில் கரைபுரண்டு ஓடியது. இதனால் அங்கும் நேற்று முன்தினம் மாலை முதல் தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையும் தண்ணீர் வரத்து கட்டுக்குள் வரவில்லை. இதனால் 2 நாட்களாக மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகிய இரண்டிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடித்தது.

ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகியவற்றில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: