2வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் 4 தங்க பதக்கம் வென்று சாதனை

திருவள்ளூர்: 2வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் முத்தமிழ் சிலம்பாலயம் குழு மாணவர்கள் 4 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஓசூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வேர்ல்டு யூனியன் சிலம்பம் ஃபெடரேஷன் சார்பில், நடைபெற்ற 2 வது   தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், திருவள்ளூர் முத்தமிழ் சிலம்பாலயம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம்,  2 வெள்ளி,  2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

இதன்படி, மினி சப் ஜூனியர் பிரிவில் ஸ்ரீ பிரகஜித், சப் ஜூனியர் ஆண்கள் பிரிவில்  யஸ்வந்த், சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் ஓவியா, நித்யஸ்ரீ, ஜூனியர் ஆண்கள்  பிரிவில் சாய்சரண், மாதேஷ் ஆகியோரும் வேல் கொம்பு, வாள் வீச்சு, தொடு சிலம்பம், சுருள்வால் ஆகிய பிரிவுகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து இவர்கள் அனைவரும்  2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள  சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: