ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைப்போம்: ஓபிஎஸ் அணி உறுதிமொழி ஏற்பு

சென்னை: ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைப்போம் என ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். அணி உறுதிமொழி ஏற்றது.  தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அதிமுக சார்பில், ஜெயலலிதா படத்தை வைத்து மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதிமுகவினர் 3 அணிகளாக பிரிந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஒற்றுமை காப்போம், ஒன்றிணைப்போம்; தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்.

ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற நிலையை மீண்டும் உருவாக்க நாம் அனைவரும் சூளுரைப்போம். அதிமுகவில் நிலவும் சர்வாதிகார போக்கை முடிவு கட்டுவோம்.அதிமுகவில் தொண்டர்களால் தலைவர் என்ற பதவியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: