தமிழகத்தில் ஆபரேசன் புதுவாழ்வு மூலம் 1,800 பிச்சைக்காரர்கள் கைது: முதலிடத்தில் தாம்பரம்

சென்னை: தமிழகம் முழுவதும் ‘ஆபரேசன் புதுவாழ்வு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் சாலைகளில் சுற்றி திரிந்த1,800 பிச்சைக்காரர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காவல்துறையால் கடந்த 3ம்தேதி காலை முதல் ‘ஆபரேசன் புதுவாழ்வு’ என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

இதில் சாலைகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 1,800 பிச்சைக்காரர்களை போலீசார் கைது செய்தனர். அதில் 255 பேர் அரசு இல்லங்களிலும், 953 பேர் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவன இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். 367 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ் 108 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதில்அதிகபட்சமாக தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 207 பேர், சேலம் மாவட்ட த்தில் 122 பேர் சிக்கினர். குழந்தைகளை, பிச்சைகாரர்களாக்கி அவர்களை நகர் புறங்களில் பிச்சை எடுக்க வைக்கும் ஆள்கடத்தல் கும்பல் பற்றி 044-28447701 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: