பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15,000 கோயில் பூசாரிகளுக்கு கருணை கொடை: பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கால பூஜை நடைபெறும் 15,000 கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு கருணைக்கொடை வழங்க வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இது குறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்கம் மாநிலத் தலைவர் வாசு முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஊதியம் ஏதுமின்றி தட்டுக் காசுகளை நம்பியே ஒருகால பூஜை கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளும் அர்ச்சகர்களும் பூஜை செய்து வருகின்றனர்.மாத ஊதியம் பெறுபவர்களுக்குத்தான் பொங்கல் கருணைக்கொடை என்று விதிகளில் திருத்தம் செய்து தற்போது வழங்கப்படும் ஊக்கத்தொகையை மாத ஊதியமாகக் கருதி இந்த 15 ஆயிரம் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் அவர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்குவது போல பொங்கல் கருணைக்கொடை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

Related Stories: