ராணிப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் சிப்காட் சாலை, எல்எப்சி பெண்கள் பள்ளி சாலை, வாலாஜா, அம்மூர் ரோடு பழைய, புதிய பஸ்நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜார்  நவல்பூர் காரை கூட்ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் கால்நடைகள் இரவு, பகலாக சுற்றித்திரிகிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தினமும் வாகன ஓட்டிகள் தொழிலாளர்கள், பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும், அதேபோல் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் தினமும் பொதுமக்களை மிரட்டி துரத்தி கடிக்கும் 100க்கும் மேற்பட்ட தெருநாய்களையும் நகராட்சி ஊழியர்கள் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: