தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அறநிலையத்துறை சார்பில் 220 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 220 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. காலை 7.45 மணி அளவில் ஒரே நேரத்தில் இந்த திருமணங்கள் நடக்கிறது. மேலும் மணமக்களுக்கான கட்டில், பீரோ உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளன. சென்னையில் நடைபெறும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மணமக்களுக்கான கட்டில், பீரோ உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களும் வழங்கப்பட உள்ளன.

Related Stories: