மாற்றுத்திறனாளிகள் தினம் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கு தலைவர்கள் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன் (தமாகா, தலைவர்): மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனித்திறமை இருக்கிறது. குறிப்பாக அவர்கள் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களைப் பெற்று பெருமை அடைவதை அனைவரும் அறிவோம். ஒன்றிய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். டிடிவி.தினகரன் (அமமுக, பொதுச் செயலாளர்): மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சி முழுமை அடையாது என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்கிடவும், உயர்வுகளை ஏற்படுத்தித் தந்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்றிடுவோம். வாழ்வின் தடைகள் அனைத்தையும் தகர்த்து, உலகம் போற்றுகிற சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்திட இறையருளிடம் வேண்டுகிறேன்.

Related Stories: