கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது

வாஷிங்டன்: கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்சித், சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.

2022 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நன்கு பேருக்கு பத்ம விபூஷன் விருதும்,  17 பேருக்கு பத்ம பூசன் விருதும், 117 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூகுல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022-ம் ஆண்டிற்கான இந்தியாவின் 3வது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதை சுந்தர் பிச்சையிடம்  அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரின் இந்திய தூதர் தரன்சித் சிங் வழங்கினார்.

இதையடுத்து பேசிய சுந்தர் பிச்சை; நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன் என்று பேசினார்.

Related Stories: