குரூப்2, குரூப் 2ஏ தேர்வுக்கு அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இ-சேவை மையம் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும்; தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: குரூப்2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இ-சேவை மையங்கள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி)கடந்த மே மாதம் 21ம் தேததி நடத்தப்பட்ட குரூப்-2&2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளின்படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை கடந்த 17ம் தேதி முதல் வருகிற 16ம் தேதி வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 2911ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: