திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;

திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்க தொடங்கி, இளையோருக்கு நிகராக சமூக நீதி போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான     உணர்வினை ஊட்டிவரும் திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியருக்கு அகவை 90 என்பதில் அகம் மகிழ்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் திராவிட மாடல் அரசின் சமூக நீதி கொள்கை சார்ந்த அனைத்து திட்டங்களுக்கும், சட்ட போராட்டங்களுக்கும் உறுதுணையாய், வழித்துணையாய் திகழும் ஆசிரியர் 100 ஆண்டு கடந்தும் வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடையாறில் உள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் பொன்முடி ஆகியோர் பங்கேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Related Stories: