ஜனவரி 12ம் தேதி வாரிசு ரிலீஸ்

சென்னை: விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது. விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, ஷாம் உள்பட பலர் நடிக்கும் படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதையடுத்து விரைவில் அடுத்த பாடல் வெளியாகப்போகிறது. படத்தின் டீசரை இம்மாதம் 15ம் தேதிக்குள் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்துடன் அஜித் நடிக்கும் துணிவு படமும் பொங்கலை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இந்த படமும் ஜனவரி 12ம் தேதிக்கு ரிலீசாகும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். வினோத் இயக்கியுள்ளார்.

Related Stories: