வீடுகளில் உள்ள மின்னிணைப்பில் ஆர்.சி.டி. சாதனம் நிறுவ வேண்டும்: ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை

சென்னை: வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனம், பொது இடங்களில், மனித உயிர் பாதுகாப்பின் அடிப்படை தேவையான ஆர்.சி.டி சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் மின் பழுது மற்றும் மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பின்படி, புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு மழைக்காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகள் மற்றும் அதன் காரணத்தால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு புதிய மின்நுகர்வோர்கள் மட்டுமல்லாது வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனம், பொது இடங்களில், மின்நுகர்வோர்ஆர்.சி.டி எனும் உயிர்காக்கும் சாதனத்தை அவரவர்கள் மின்னிணைப்பில் தவறாமல் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: