ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்க ரூ.5 கோடி நிதி: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் சாகுபடியுடன், கறவை மாடு உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகிதம் அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000 என மொத்தம் ரூ.70,000 மானியமாக வழங்கப்படும். பசுமைக்குடில் / நிழல்வலைக்குடில் அமைக்க, வேளாண் இயந்திரமயமாக்கல், சூரிய கூடார உலர்த்திகள், மதிப்பு கூட்டும் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டங்களுக்கு ஆதி திராவிட பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளாக இருந்தால், கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும். இந்த இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையத்தில் முன்பதிவுசெய்யலாம்.

Related Stories: