அமைச்சர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று இரவு தனது வீட்டில் இருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு இதய குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய  ஆஞ் ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: