கடலில் குதித்து அரசு ஊழியர் தற்கொலை

துரைப்பாக்கம்: திருவான்மியூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் கிருஷ்ணராஜ் (45). இவர், 10 ஆண்டுக்கு முன் மனைவியை பிரிந்து, தந்தை கோவிந்தராஜூடன் வசித்து வந்தார். கடந்த 5 வருடமாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், கிருஷ்ணராஜ், தந்தை கோவிந்தராஜியிடம் அவ்வப்போது தற்கொலை எண்ணம் வருவதாக கூறி வந்துள்ளார். நேற்று, திருவான்மியூர் கடலில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: