ராஜபாளையத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் மழைநீருடன், குடிநீரும் தேங்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

சாலைகளை தோண்டி சிமெண்ட் போட்ட பின்பு, குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், மீண்டும் சாலையை தோண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகரட்சி நிர்வாகத்தில் கேட்டால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை சோதனையால், குழாய் உடைப்பில் தண்ணீர் வெளியேறுவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால், பொதுமக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. கடந்த 6 ஆண்டுகளாக தாமிரபரணி தண்ணீருக்காக ராஜபாளையம் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சாலையில் வீணாகச் செல்வது பொதுமக்களை அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: