டோலிவுட்டுக்கு போகிறார் பிரதீப் ரங்கநாதன்

சென்னை: கோமாளி படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்கிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கினார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரூ.50 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்தை லவ் டுடே பெயரிலேயே தெலுங்கில் டப் செய்தனர். டப்பிங் உரிமையை ரூ.3 கோடிக்கு தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு பெற்றார். அவரே படத்தை வெளியிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வந்தது. முதல் 4 நாட்களில் ஆந்திரா, தெலங்கானாவில் ரூ.7.20 கோடியை இந்த படம் வசூலித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நேரடி தெலுங்கு படமான அல்லரி நரேஷ் நடித்த இட்லு மரெடுமில்லி பிரஜனீகம், 4 நாட்களில் வெறும் ரூ.2.60 கோடிதான் வசூலித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும் லவ் டுடே படத்துக்கு தெலுங்கில் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. இதையடுத்து தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சிலர், பிரதீப் ரங்கநாதனை டோலிவுட்டுக்கு அழைக்கிறார்கள். ஏற்கனவே தமிழில் படம் இயக்க, பிரதீப் அட்வான்ஸ் வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்க பிரதீப் திட்டமிட்டுள்ளாராம்.

Related Stories: