முகம் வீங்கிய போட்டோ வெளியிட்ட ஸ்ருதி; ரசிகர்கள் ஷாக்

சென்னை: முகம் வீங்கிய நிலையில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற பான் இந்தியா படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக வீரசிம்ம ரெட்டி, சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படங்களில் நடிக்கிறார். ஹாலிவுட்டில் உருவாகப்போகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து இரண்டு புகைப்படங்களை ஸ்ருதி வெளியிட்டார். அதில் முகம் வீங்கி, உதடுகள் வீங்கிய நிலையிலும் கண்களிலிருந்து நீர் வடியும் நிலையிலும் அவரது போட்டோக்கள் இருந்தன.

இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்ருதிக்கு என்ன பிரச்னை? உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு, தனக்கு காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட அலர்ஜியால் கண்கள், கன்னம், உதடுகள் வீங்கிவிட்டதாகவும் கண்களிலிருந்து தொடர்ந்து நீர் வடிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து சீக்கிரம் குணமாகும்படி ரசிகர்கள் அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகிறார்கள்.

Related Stories: