பாளையங்கால்வாய் சாலையில் பரப்பிய ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் அவதி

நெல்லை :  பாளையங்கால்வாய் சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகளால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் பாளையங்கால்வாய் பகுதியிலிருந்து மேலப்பாளையம் சந்தனம்மாள்புரம் ரயில் நிலையம் வரை சுமார் 3 கிமீதூரத்துக்கு தார் சாலை அமைந்துள்ளது.

இச்சாலையை மேலப்பாளையம், குருந்துடையார்புரம், சந்தனம்மாள்புரம், குலவணிகர்புரம் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையை விரிவுபடுத்தும் பணி துவங்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கால்வாய் கரைகள் சில இடங்களில் பலப்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து சாலையின் இருபுறத்திலும் விரிவாக்க பணிக்காக சரல்மண் கொட்டப்பட்டு சமன்படுத்தும் பணி நடந்தது. இதைதொடர்ந்து தற்போது சாலையின் இருபுறத்திலும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது. தார் கலந்து கொட்டாமல் வெறும் ஜல்லிகள் மட்டும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேலப்பாளையம், நத்தம், சந்தனம்மாள்புரம், கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெற்குபுறவழிச்சாலை வழியாக பாளை, வண்ணார்பேட்டை செல்லும் இரு சக்கரவாகனங்கள், ஆட்டோக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றன. ஒரு புறத்தில் பாளையங்கால்வாய் மறுபுறத்தில் வயல்வெளி என பள்ளதாக்குகளுக்கு நடுவில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: