ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம்: பிருந்தா காரத்

திருப்பூர்: ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு ஜவுளி துறையின் இன்றைய நிலையே உதாரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார். நவம்பர் புரட்சி தினத்தின் 105-ம் ஆண்டை முன்னிட்டு திருப்பூர் குமார் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்தூண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் தொழில்துறை கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருப்பதற்கு ஜவுளி துறையே சிறந்த உதாரணம் என்றார். பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு லட்ச கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார். பாரதிய ஜனதா அரசு கார்பரேட்  நலன்களுக்காக அரசு ஏன் அக்குற்றசாட்டிய பிருந்தா காரத் அதனால் தான் கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் என்று கூறினார். 

Related Stories: