விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இல்லை: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் விமான பயணிகளில் 2% நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வரும் 2% பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இனி விமானம் மூலம் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை. அறிகுறி உள்ள நபர்கள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும், அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரிசோதிக்கப்படும். பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படும். கட்டாய கொரோனா பரிசோதனை என்பது அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இல்லை. இவ்வாறு பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: