காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்ப பெறும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்ப பெறும் திட்டத்தை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்’ என்ற பெயரில் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்னைகளுக்கு திறன்மிக்க மேலாண்மைக்கான ஒரு தனித்துவமான முனைப்புத்திட்டத்தை சென்னை, காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்தது.

இதில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், கண்காட்சி நிகழ்வில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறுவது (“Reversal of Diabetes”) என்ற ஒரு புதிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார். இச்செயல்திட்டமானது, ரத்த அழுத்தம், பாதங்கள் மீது ஆய்வு, கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, உயிரி-வேதியியல் சோதனைகள், கொழுப்பு பண்பியல்புகள் மற்றும் விழியடி சோதனை ஆகியவற்றின் மீது இலவச பரிசோதனைகளை வழங்குகிறது.  

கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை மீது ஆலோசனை, நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த சமையல் செய்முறை குறிப்புகள் மற்றும் துணை ஊட்டச்சத்து தயாரிப்புகள், இயன்முறை மருத்துவ சிகிச்சை மற்றும் நீரிழிவு பராமரிப்பு மீதான பிற தயாரிப்புகள் ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் அரங்குகளும் இக்கண்காட்சி நிகழ்வில் இடம்பெற்றிருந்தன. நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் என்ற தலைப்பு மீது நிபுணர்களது ஒரு குழு விவாதமும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்றது.  இதில் நீரிழிவியல் சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், ஆகியோர் இடம்பெற்று பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு சிகிச்சை நிபுணர் பரணிதரன் கூறியதாவது: இந்த ஆண்டு நடத்தப்படும் டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ் கண்காட்சி வழியாக நோய்களின் இடர்களை அடையாளம் காண்பது மற்றும் திறம்பட அவைகளை சிகிச்சையின் மூலம் நிர்வகிப்பது என மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து கற்பிப்பதே நோக்கமாகும்.  

நீரிழிவு மேலாண்மையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களின் காரணமாக, நீரிழிவு நிலையிலிருந்து, நீரிழிவு இல்லாத நிலைக்கு மாறுவது சாத்தியமாகியிருக்கிறது. சரியான தகவலறிவு மற்றும் வழிகாட்டல் மூலம் நீரிழிவை திறம்பட நிர்வகிப்பதற்கு இச்செயல்திட்டத்தை மக்கள் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் இதன் மூலம் நீரிழிவு பாதிப்பை மாற்றி, நீரிழிவு இல்லாத நிலையை எட்டமுடியும் என்றார்.

Related Stories: