ஹீரோயினாகும் குழந்தை நட்சத்திரம்

சென்னை: மலையாளத்தில் ‘இன்ஷா’ உள்பட நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளவர், பிரார்த்தனா சந்தீப். தமிழில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த அவர், தற்போது ‘ரங்கோலி’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரி மகன் ஹமரேஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி, சதீஷ் குமார் தயாரிக் கின்றனர். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறுகையில், ‘இது பள்ளி மாணவர்களின் கதை.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவன், பெற்றோர் நிர்ப்பந்தம் காரணமாக உயர்தர தனியார் பள்ளியில் சேர்க்கப்படுவதால், அங்கு அவன் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. இதில் ஹமரேஷ், பிரார்த்தனா இருவரும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக நடிக்கின்றனர். இருவருக்கும் காதல் இருக்காது. ஆனால், எதிர்பாலின ஈர்ப்பு இருக்கும். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் பிரார்த்தனாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்த கேரக்டருக்கு ஏற்ற வளர்ச்சியை அவர் அடைந்திருந்ததால், இப்படத்துக்கு அவரை ஹீரோயினாக தேர்வு செய்தோம்’ என்றார்.

Related Stories: