அமீர் படத்தின் டைட்டில் மாற்றம்

சென்னை: ‘யோகி’ படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் அமீர், பிறகு ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘வட சென்னை’ படத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம், ‘நாற்காலி’. இதை மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்குகிறார். அரசியலை நையாண்டி செய்யும் கதை கொண்ட இப்படத்தின் வசனத்தை அஜயன் பாலா, பாலமுரளி வர்மன் இணைந்து எழுதியுள்ளனர். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி வெளியிட உள்ள இப்படத்தின் டைட்டில், ‘உயிர் தமிழுக்கு’ என்று மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: