காரைக்காலில் 5 ஏக்கரில் 500 வகையான மருத்துவ குணம் கொண்ட பயிர்களை பயிரிட்டு அசத்தும் இயற்கை விவசாயி

காரைக்கால்: உணவே மருந்து என்னும் தாரக மந்திரத்தை நிரூபிக்கும் வகையில் காரைக்காலில் 5 ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட பயிர்களை பயிரிட்டு இயற்கை விவசாயி பாஸ்கர் சாதனை படைத்து வருகிறார்.விவசாய உற்பத்தியில் பெரும்பாலும் மனிதனுக்கு நன்மை பயக்கும் இயற்கை உரங்களை தவிர்த்து கால சக்கரத்திற்கு ஏற்ப செயற்கை உரங்களை பயன்படுத்தி உடல் நலனை பாதிக்கும் உணவு பொருட்கள் உற்பத்தியில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் அரிதினும் அரிதாய் ஆங்காங்கே முத்தாய்ப்பாய் வெகு சில விவசாயிகளே உணவு உற்பத்தியில் இயற்கை முறையில் பயன்படுத்தி சாதனைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காரைக்காலை சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கர் சுமார் 5 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்து வரிச்சிகுடி பகுதியை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பாஸ்கர். இவர் பல்வேறு நெல் ரகங்களை கண்டுபிடித்து பாரம்பரிய முறையில் பயிரிட்டு வருகிறார்.

தற்போது இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பாரம்பரிய விதைகளை விதைத்து மேலும் ஆதிகாலத்து முன்னோர்களின் வழி முறைகளைப் பின்பற்றி இந்தியாவின் பாரம்பரிய அரியவகை நெல் பயிர்களை கண்டுபிடித்து தனது 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 500 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு விவசாயம் செய்து அசத்தி வருகிறார்.

அரிய வகையான கீரி சம்பா, முத்து சம்பா, தமிழ் பாரம்பரியமான நெல் பயிர்களையும், பயிரிட்டவர் தற்போது இயற்கை முறையில் மருத்துவ குணம் உள்ள பயிர்களான நரம்பு மண்டலம் வலுப்படுத்தும் பயிரான மாப்பிளை சம்பா, சுகப்பிரசவம் மற்றும் தாய்ப்பால் சுரக்க வைக்கும் இயற்கை பயிர் ஆனா பூங்கார், எலும்புகள் பலம்பெறும் காட்டுயானம் என்ற வகையான பயிர் மற்றும் வயிறு புண் குணமாகும் வாசனை சீரக சம்பா, கருப்பு நிறம் கொண்ட பயிறு, மேலும் கேன்சர் வராமல் தடுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல உணவு நெல் ரகமான கவுனி மற்றும் தங்க சம்பா, இதயத்தை பாதுகாக்கும். பயிர்களை நோய் எதிர்ப்பு சக்திகளை மட்டும் தடுக்கும் வகையிலும் இவர் விவசாய நிலத்தில் இயற்கை முறையில் பயிரிடுகிறார்.

இயற்கை மூலம் மருத்துவ குணம் கொண்ட அரிசியை வாங்க தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இவரிடம் அரிசி வாங்க வருவது தமிழக மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஆச்சரியப்பட வைத்து உள்ளது.

Related Stories: