தமிழகத்தில் 4 மண்டலத்தில் அறுவை சிகிச்சை இறப்புகளை ஆராய சிறப்பு தணிக்கை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 4 மண்டலத்தில் அறுவை சிகிச்சையில் ஏற்படும் இறப்புகளின்  இழப்பை ஆராய்வதற்காக சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பான அறுவை சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல் என்ற தலைப்பில் கருத்தரங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நிருபர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:  தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக 600க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை தினந்தோறும் டி.எம்.எஸ், டி.பி.எச். போன்ற மூன்று துறைகளிலும் ஏறக்குறைய 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் தினமும் நடைபெறுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பாக அறுவை சிகிச்சைகள் நடைபெறுவது தொடர்பாக இந்த கருத்தரங்களில் விவாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் உள்ளனர். அதில் அறுவை சிகிச்சைக்கான நெறிமுறைகள் குறித்து புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் ஏற்படும் இறப்புகளின் காரணங்கள் குறித்து தணிக்கை செய்ய உள்ளனர். இதற்காக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய 4 மண்டலங்களிலும் தணிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு குழுவிலும் 4 அறுவை சிகிச்சை நிபுணர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 11 மாதத்தில் டெங்கு பாதிப்பினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: