கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடும் விதமாக 4 வகைகளில் கேக் தயாரிக்க திட்டம்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது. பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உள்பட 4 வகைகளில் கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து நடப்பு மாதமே கேக் தயாரிப்பையும் தொடங்க ஆவின் நிர்வாகம் திட்டம் தீட்டியுள்ளது.

தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது ஆவின் தயாரிப்பு நிர்வாகம். தினசரி பொதுமக்கள், பால், நெய் என பலவிதமாக பால் பொருட்களை ஆவின் நிர்வாகத்தில் வாங்கி உபயோகின்றனர். இப்படி பல வாடிக்கையாளர்களை கொண்ட ஆவின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே புது புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு வகைகள் செய்து அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் கேக் அறிமுகமாகிறது.

நடப்பு மாதமே அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்றும் ஆவின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகமாகவுள்ளது என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: