தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை வரலாறு படம்: கர்நாடக முதல்வர் டிரைலரை வெளியிட்டார்

பெங்களூரு: கர்நாடகா தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கை, ‘விஜயானந்த்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. வரும் டிசம்பர் 9ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இதை ரிஷிகா சர்மா இயக்கியுள்ளார். விஜய் சங்கேஸ்வர் கேரக்டரில் நிஹால் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா நடித்துள்ளனர். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். வி.ஆர்.எல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

வெளியிட்டு பேசும்போது, ‘1985ல் இருந்து விஜய் சங்கேஸ் வர் எனது நல்ல நண்பராக நீடித்து வருகிறார். அவர் ஒரு சாகசக்காரராக எனக்கு தெரிந்தார். எப்போதுமே அவரிடம் ஒரு தாகம் இருக்கும். கிரியேட்டிவாக யோசிப்பார். அவர் நடத்திய அனைத்து தொழில்களும் அதிக லாபம் ெகாடுத்துள்ளது. முடியாததை முடிப்பதே அவர் பாணி. லோக்சபா எம்.பியாக அவர் இருந்தார்.

 நேரம் தவறாமை அவருடைய பலம். அவருடைய கடின உழைப்பு எல்லா துறைகளிலும் அவருக்கு பலத்தைக் கொடுத்தது. அவர் எதை தொட்டாலும் வெற்றியே. அவரது சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தை இளைஞர்கள் பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம்’ என்றார். ஆனந்த் சங்கேஸ்வர், ரிஷிகா சர்மா மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

Related Stories: