கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா பங்கேற்பு

ஆலந்தூர்: நங்கநல்லூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் பள்ளியில், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல நல அலுவலர் சுதா, வார்டு கவுன்சிலர் தேவி ஏசுதாஸ் முன்னிலை வகித்தனர்.

முகாமில், பொது, மருத்துவம், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், கண், இதய பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் குடும்ப நலம், ஊட்டச்சத்து, விழிப்புணர்வு மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஆகியவை குறித்த கண்காட்சிகள் இடம்பெற்றது. முகாமில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், கவுன்சிலர்கள் சாலமோன், அமுத பிரியா செல்வம், பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்காதேவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: