இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெங்குலு பகுதியை ஒட்டி நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பூமியில் 25 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சில நிமிடங்களில் 5.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே சமயம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவின் பாலி தீவில் கடந்த 2 தினங்களுக்கு முன், ஜி20 உச்சி மாநாடு நடந்து முடிந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: