சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே 3 சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

சேலம்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளதால், பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியே 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் (06061) வரும் 23ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06062) வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் (06063), இன்று (18ம் தேதி) முதல் ஜனவரி 27ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06064) வரும் 20ம் தேதி முதல் ஜனவரி 29ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. சென்னை எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில் (06065) வரும் 21ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 7.40 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06066) வரும் 22ம் தேதி முதல் ஜனவரி 24ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்றடைகிறது.

Related Stories: