4273 கி.மீ. என்று அதிக தூரம் இயக்கப்படும் ரயில் வாரம் இரு முறையாக மாற்றம் பெறும் கன்னியாகுமரி-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் கேரளா வழியாக இயக்குவதால் குமரி பயணிகள் அதிருப்தி

நாகர்கோவில்: கன்னியாகுமரி - திப்ரூகர் வாராந்திர ரயில்   தினசரி ரயிலாக ரயில்வே வாரியத்தால் கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.   வாராந்திர ரயிலாக இயங்கி வந்த இந்த ரயில் இனி வாரம் 2 முறை ரயிலாக   மாற்றம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்தின்   திப்ருகர் என்ற இடத்துக்கு 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திர   ரயில் அறிவிக்கப்பட்டு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 4273 கி.மீ. என்று அதிக தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர், சேலம் வழியாக   இயக்கப்படுகின்றது. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தின் இடநெருக்கடியை   சமாளிப்பதற்காக நாகர்கோவிலுக்கு அனுப்பி நிறுத்திவைத்து பராமரிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. கன்னியாகுமரி -  திப்ருகர்  ரயில் 2000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ரயில். ஆகவே கன்னியாகுமரி,  திப்ருகர் என்று 2 இடங்களிலும் பிட்லைன் பராமரிப்பு   செய்ய  வேண்டியது உள்ளது. இனி இந்த ரயில் இரவு கன்னியாகுமரி விட்டுவிட்டு   காலிபெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு பராமரிப்புக்கு என்று   கொண்டுவரப்படும். இவ்வாறு வந்த பெட்டிகள் பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்று   மீண்டும் மதியத்திற்கு மேல் காலி பெட்டிகள் கன்னியாகுமரிக்கு கொண்டு   செல்லப்பட்டு பின்னர் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் ரயிலாக இயங்கும். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பகல் நேரத்தில் பிட்லைன் பராமரிப்பு   தினசரி செய்யப்படும்.

இவ்வாறு செய்வதால் குமரி மாவட்ட பயணிகள் நலனுக்காக புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் பிட்லைன்   இடநெருக்கடியாக இருக்கின்ற காரணத்தால் புதிய ரயில்கள் இயக்க முடியாமல்   போகும். 2000 கி.மீக்கு மேல் இயங்கக்கூடிய ரயில்களான கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்குதல்   கன்னியாகுமரி - ஹவுரா ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல் போன்ற கோரிக்கைகளை   நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ரயில் பயணிகள் சங்கத்தினர்   குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,  ‘நாகர்கோவில் - திருவனந்தபுரம் இருப்புப்பாதையில் அளவுக்கு அதிகமாக ரயில்களை இயக்கி  டிராக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பயணிகளின்   பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று தெரியாது.

இந்த தடத்தில் ரயில்   தண்டவாளங்கள் பராமரிப்புக்கு என சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   தற்போது இந்த ரயில் இவ்வாறு பராமரிப்புக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில்   இயங்குவதால் தண்டவாள பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலை உள்ளது. இது   இந்த தடத்தில் இயங்கும் மற்ற ரயில்களை வெகுவாக பாதிக்கும். மேலும்   தண்டவாள பராமரிப்பு செய்ய முடியாமல் டிராக் உடைதல், கிராக் வருதல் போன்ற   ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றது இதற்கு முழுக்க முழுக்க தெற்கு ரயில்வே   அதிகாரிகள் பொறுப்பு ஆகும். கன்னியாகுமரியிலிருந்து தற்போது இயக்கப்படும்   திப்ருகர் ரயில் கேரளா வழியாக சுற்றி செல்வதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த   ரயிலில் பயணிப்பதை தவிர்க்கின்றனர்.

சென்னையிலிருந்து திப்ருகருக்கு   இயக்கப்படும் வாராந்திர ரயிலை விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி   வழியாக கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று   கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு   கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு சென்னை வழியாக இயங்கும் பட்சத்தில்   சுமார் 250 கி.மீ க்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயண நேரத்தில்   வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம். இவ்வாறு இயக்கும்   போது குமரி மாவட்ட பயணிகளுக்கு தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு   கூடுதல் ரயில் சேவை கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள்   தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல பகல் நேர ரயில் சேவையும்   தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களை   சார்ந்த பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவையும் கிடைக்கும்’ என்றனர்.

Related Stories: