இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டி நடைபெற இருந்த வெலிங்டனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி டாஸ் கூட போடாமலேயே கைவிடப்பட்ட்டது.

இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இளம் வீரர்களை கொண்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து தாய்க்கு எதிராக களமிறங்க உள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 போட்டிகள் தொடங்க இருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருந்தது.

இந்நிலையில் வெலிங்டனில் மழை பெய்து வரும் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மழை தொடர்ந்து பெய்து வரும் காரணமாக போட்டி ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இரு அணிகள் மோதும் அடுத்த டி20 போட்டி வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: