பாரதியார் பல்கலை, லயோலா கல்லூரிகளுடன் ஒப்பந்தம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை

சென்னை: பாரதியார் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரிகளுடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் சென்னை லயோலா கல்லூரி ஆகிய கல்லூரிகளுடன் சமூக தணிக்கை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குனர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் கையெழுத்தானது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே பயனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளை பெற வேண்டும். திட்டம் குறித்த செயல்பாடுகளை பயனாளிகளிடம் எடுத்துரைக்க வேண்டும். பயனாளிகளின் பங்கினை உணர்த்த வேண்டும். இது போன்ற இதர அம்சங்கள் குறித்த சமூக தணிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சமூக தணிக்கை செய்வதன் மூலம் திட்டத்தில் உள்ள இடர்பாடுகளை களையவும், உரிய நேரத்தில் திட்டத்தினை முடிக்க உதவியாக இருக்கும். இதுவரை 21 திட்டப்பணிகளில் சமூக தணிக்கை செய்ய 9 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாரிய நிர்வாகப் பொறியாளர் வி.பாண்டியன், வாரிய தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.ஏ.நிர்மல்ராஜ், பாரதியார் பல்கலை பதிவாளர் முருகவேல், லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜான்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: