ஜல்லிக்கட்டு வழக்கில் 22ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உட்பட 15க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி  விசாரணைக்கு வந்தபோது, 3 வாரத்தில் அனைத்து தரப்பினரும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில், ‘‘ஜல்லிக்கட்டு தொடர்பான அறிக்கை இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை என்பதால், வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என தெரிவித்தார். அதனை கேட்ட நீதிபதி, ‘‘வரும் செவ்வாய்கிழமை விசாரிக்கலாம்’’ என தெரிவித்தார்.

Related Stories: