விளையாட்டு துறையின் உயரிய விருது தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022ல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அசந்தா சரத்கமல் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். அர்ஜுனா விருதுக்குத் தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதி வாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும். பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டத்தில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்த 17 வயதே ஆன மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா அர்ஜுனா விருது 2022க்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே இத்தகைய அங்கீகாரம் பெற்றுள்ள அவருக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: