எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம்; எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை, திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.  கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின், ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.

பல்லவன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றன. எத்தகைய மழை வந்தாலும் சமாளிப்போம். எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: