தமிழகத்தில் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

சென்னை : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 102 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 102 பேரில் 90 பேரிடம் காவல்துறை சோதனை, விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். விசாரணை அடிப்படையில் நேற்று சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படும் நபர்களை தொடர்ந்து உளவுத்துறை மற்றும் 3 பிரிவுகள் கண்காணித்து வருகிறது. இருப்பினும் கோவை கார் வெடிப்புக்கு பிறகு இதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடததப்பட்டு மாநிலத்திற்கென தனியாக ஒரு தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்பையில், இந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிறகாக தமிழகத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 102 பேர் பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரணையானது  தமிழக போலீசாரால் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 90 பேரிடம் விசாரணையானது முழுமையாக நடத்தி முடிக்கபட்டதாகவும், அவர்களது சமூக வலைதள பக்கங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாகவும் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையானது மாநில தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க முன்னோட்டமாக பார்க்கபடும் என தமிழக காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இந்த தமிழக காவல்துறையின் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு மிக விரைவில் அமைக்கப்பட்டு செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி அல்லது ஐஜி தலைமையில் உருவாக்கப்பட்டு தொடர்ந்து தீவிரமாக செயல்படும் எனவும், தமிழகத்தில் தீவிரவாத தொடர்புடைய நபர்களை முற்றிலுமாக ஒலிக்கும் நடவடிக்கை என்பது தீவிரமாக எடுக்கப்பட்டுவருவதாக தமிழக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: