டெல்டா மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: கனமழை தொடர்பாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 3% குறைவாக பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும். சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலத்தில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, திருப்பூர், தேனி, மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Stories: