ஆப்கான் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செல்லத் தடை: தலிபான்களின் புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சை..!

காபூர்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா படைகள்  வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இந்நாட்டில் மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தாலிபான் அரசு தடை விதித்தது.

இந்த சம்பவம் உலகளாவிய கண்டனத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அறநெறி அமைச்சகம் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறியதை அடுத்து தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தலிபான்களின் புதிய உத்தரவால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

Related Stories: