ஊட்டி - கூடலூர் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டுநர்கள் அவதி

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் குறுகியும், அதிக  வளைவுகளையும் கொண்டுள்ளன. இதனால், எதிரே வரும் வாகனங்கள் மிக அருகில்  வந்தால் மட்டுமே தெரியும். அதேபோல், வளைவான பகுதிகளில் கால்நடைகள் நின்றால்  கூட தெரியாது. இந்நிலையில், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில்  தற்போது ஹில்பங்க் முதல் பைக்காரா வரையில் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில்  குதிரைகள் கூட்டமாக வலம் வருகின்றன.

குறிப்பாக, தலைகுந்தா மற்றும் பைன்  பாரஸ்ட் பகுதிகளில் ஏராளமான குதிரைகள் தற்போது சாலையில் வலம் வருகின்றன. இதனால்,  இவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும்  சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில்  செல்பவர்கள் இந்த குதிரைகளின் மீது மோதி விபத்தும் ஏற்படுகிறது. மேலும்,  வாகனங்கள் செல்லும்போதே வானங்களின் மீது குதிரைகள்  மோதுவதால், வாகனங்களும் சேதம் அடைகின்றன.

மேலும், இவைகள் சாலையோரங்களில்  உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வனங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிகவுகளை  உட்கொள்வதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையில், குதிரைகள்  நடமாடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: