தீபாவளி பண்டிகைக்கு பின் ஆட்டு வார சந்தையில் குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று மாலை ஆடுகள் விற்பனைக்காக சந்தை கூடுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு முத்துப்பேட்டை சுற்று பகுதி மட்டுமின்றி அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, பெருகவாழ்ந்தான், கோட்டூர், சித்தமல்லி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உட்பட பல பகுதிலிருந்து வியாபாரிகளும் பொதுமக்களுக்கும் ஆடுகள் வாங்கவும் விற்கவும் வந்து செல்வதுண்டு. இங்கு நியமன விலையில் கிடக்கும் என்பதால் ஒவ்வொரு வாரமும் இந்த சந்தையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் சென்ற வாரங்களில் தீபாவளி பண்டிகை என்பதால் ஆடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகளவில் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆடுகளை விற்க மட்டுமே கொண்டு வந்திருந்தனர். ஆனால் வாங்க வியாபாரிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. பின்னர் தீபாவளி முடிந்த பிறகு நடந்த வார சந்தையில் போதிய கூட்டமில்லாமல் இருந்த நிலையில் நேற்று வார சந்தையில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மக்கள் தங்களது ஆடுகளை விற்க கொண்டு வந்தனர்.

அதேபோல் விஷேசங்களுக்கும், வேண்டுதலுக்கும், வெட்டுவதற்காக ஆடுகளை வாங்க அதிகளவில் மக்களும் வந்திருந்தனர். அதேபோல் அதிகளவில் வியாபாரிகளுக்கும் ஏராளமான வாகனங்களுடன் வந்திருந்தனர். இதனால் வார சந்தை முழுவதும் நூற்றுக்கணக்கானவர் ஒரே நேரத்தில் கூடி இருந்தனர். அதேபோல் வந்திருந்தவர்கள் தங்களுக்கு தேவையான பட்ஜெட்டில் ஆடுகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

குறிப்பாக பெண் ஆடுகள் சிறியது பெரியது என அளவுக்கு தகுந்த விலையாக விற்பனை செய்யப்பட்டது. 8 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள கிடா ஆடுகள் ரூபாய் 6,500 முதல் ரூபாய் 7,500 வரை மலிவாக விலைக்கு வாங்கி சென்றனர்.இதுகுறித்து வார சந்தை நடந்தும் மார்க்ஸ் கூறுகையில், இந்தவாரம் அதிகளவில் மக்கள் கூடி உள்ளனர் ஆடுகளின் விலைகளுக்கு  நியாயமானதாக இருந்தது என்றார்.

Related Stories: