இந்து என்றால் அநாகரீகம், ஆபாசம் காங்கிரஸ் தலைவர் பேச்சுக்கு பல்வேறு கட்சிகள் கண்டிப்பு: மன்னிப்பு கேட்க மறுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜாரகிஹோளி, ‘இந்து என்ற வார்த்தை இந்தியாவை சேர்ந்தது அல்ல; பாரசீக வார்த்தை. இந்து என்பது ஆபாசம், அநாகரீகம், கரடுமுரடு, கொச்சையானது என்ற வார்த்தைகளை உள்ளடக்கி உள்ளது. இதை நான் சொல்லவில்லை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது,’ என்று கூறினார். இந்த கருத்தை கூறிய ஜார்கிஹோளிக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், `ஜார்கிஹோளி அரைகுறையாக  படித்துள்ள அறிவு குறைந்த மனிதர். தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்து மதத்தை கீழ்தரமாக விமர்சித்துள்ளார். அவரின் கருத்து கோடிக்கஅவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார். அதே நேரம், ‘ஜார்கிஹோளி கூறியது அவரின் சொந்த கருத்து’ என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். பெலகாவியில் நேற்று சதீஷ் ஜார்கிஹோலி அளித்த பேட்டியில், ‘யாரிடமும் மன்னிப்பு கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. தவறாகப் பேசி விட்டதாக உணர்ந்தால், மன்னிப்பு கேட்பது மட்டுமல்ல; எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்வேன். அரைகுறையாக பேசவில்லை. என்னிடம் முழு ஆதாரங்கள் உள்ளன,’ என தெரிவித்தார். ‘ நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?’ என்ற கேள்விக்கு, ‘நான் இந்தியன்’ என பதிலளித்தார்.

Related Stories: