திருவாடானையில் சேதமடைந்துள்ள ஆதி மகாமாரியம்மன் கோயிலை புனரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டு பழமையான ஆதி மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது இந்தக் கோயில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. எனவே இந்த பழமையான கோயிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தி பக்தர்கள் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அஸ்வாரவி கூறுகையில். இப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஆதி மகாமாரியம்மன் கோயில் சுவர்கள் பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ளது. மேலும் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாமல் கோயில் பூட்டப்பட்டு உள்ளது. இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் எங்களது முன்னோர்கள் ஆதிகாலத்தில் இருந்து வழிபட்டு வந்துள்ளனர்.

இங்குள்ள 5க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோயில்களை தினசரி பக்தர்கள் வழிபாடு செய்து ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது போல், இந்த ஆதி மகாமாரியம்மன் கோயிலையும் புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தி பக்தர்களின் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Related Stories: