மணிமுத்தாறு சோதனை சாவடியில் செங்குறிஞ்சி மரங்கள் பறிமுதல்-ரூ.80ஆயிரம் அபராதம்

அம்பை : மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் ஊத்து பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்குறிஞ்சி மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமாக ரூ.80ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, கோதையாறு போன்ற இடங்களில்  தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு தோட்ட தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கானவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஊத்து பகுதியிலிருந்து வீட்டுச்சாமான்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை அப்புண்ணி மகன் சுபாஷ் என்பவர்  ஒட்டி வந்தார். மணிமுத்தாறு வன சோதனை சாவடி வனக்காப்பாளர்கள் அந்த லாரியை மறித்து சோதனை செய்த போது அதில் செங்குறிஞ்சி மரத்துண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் செண்பக ப்ரியா உத்தரவின் படி அம்பை வனச்சரக அலுவலர்கள், வனக்குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.80ஆயிரத்தை அபராத கட்டணமாக வசூலித்தனர்.

Related Stories: