நாகப்பட்டினத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஈன்ற கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளர்: 2.கி.மீ துரத்தி ஓடிவந்தது தாய் பசு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஈன்ற கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் எடுத்து சென்றதை பார்த்த தாய் பசு, 2 கி.மீ. தூரம் விரட்டி சென்று பாசமழை பொழிந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் வளர்த்து வந்த பசுமாட்டை காணாமல் பல்வேறு இடங்களில் நேற்று தேடினார். நாகப்பட்டினம் கடற்கரை சாலை அருகே கன்றுக்குட்டி ஈன்ற நிலையில் பசுமாடு நிற்பதை கண்டார். இதையடுத்து கன்று குட்டியை, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டுக்கு புறப்பட்டார்.

கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்து செல்வதை பார்த்த தாய் பசு, மா... மா... என கத்திக்கொண்டே பின்னால் விரட்டி சென்றது.

ஒரு கட்டத்தில் ஆட்டோவை வழிமறித்து நின்ற பசுமாடு, குட்டியை ஏக்கத்துடன் ஆட்டோவை சுற்றிசுற்றி வந்து பாசமழை பொழிந்தது. இதையடுத்து கணேசன், தாய் பசுவை, கன்றுகுட்டியுடன் சேர்த்து அழைத்து சென்றார். ஈன்றெடுத்த கன்று குட்டியை சிறிது நேரம் கூட பிரிய மனமில்லாமல் தாய்ப்பசு 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பாசமழை பொழிந்த காட்சி பார்த்தோர் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: