கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி: நீரின்றி இதுவரை 205 யானைகள் பலியானதாக தகவல்

ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக குடிக்க தண்ணீரின்றி யானைகள் செத்து மடிகின்றன. கென்யாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு உயிரினங்களும் நீரின்றி உயிரிழந்து வருகின்றன. யானைகள் அதிகம் உள்ள கென்யாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிக்க தண்ணீரும், உணவுமின்றி யானைகள் உயிரிழந்து வருகின்றன.

இது குறித்து கென்யாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் வறட்சி காரணமாக இதுவரை 205 யானைகள் வறட்சிக்கு  இருப்பதாக தெரிவித்தார். கென்யாவில் யானைகள் மட்டும் இல்லாமல் 14 வகையான உயிரினங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கென்யாவில் தொடர்ச்சியாக மழை பெய்வது குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக வடக்கு கென்யாவில் 3-வது ஆண்டாக குறைந்தபட்ச மழையளவு பதிவாகியுள்ளது. கென்யா சுற்றுலாத்துறை பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.   

Related Stories: